Wednesday, April 15, 2015

புத்தளத்தில் புதிய உதைப்பந்தாட்ட லீக்

தற்போது இயங்கி வரும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கிலுள்ள உதைப்பந்தாட்ட கழகங்கள் ஒன்றினைந்து புதிய நிர்வாக சபையொன்றை தெரிவு செய்வதற்கான கூட்டமொன்றை  புத்தளம் ஐ.எப்.எம். இல் நேற்று இரவு  நடாத்தினர்.  த்ரீ ஸ்டார்ஸ், விம்பிள்டன், நியூ ஸ்ட்ராஸ், நியூ ப்ரெண்ட்ஸ், பேர்ல்ஸ், ட்ரிபல் செவென் ஆகிய உதைப்பந்தாட்ட கழக  உறுப்பினர்களுடன்   இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உதவி செயலாளரும் தொழில் நுட்ப பிரிவு தலைவருமான டப்ளிவ்.ஏ.எம். ரோஹித பெர்னாண்டோவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் உரிய காலத்திற்கு வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்தாததனால் நாம் இன்று இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்தினோம் என்று  நியூ ஸ்ட்ராஸ் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். ஆஸாத் தெரிவித்தார்.

த்ரீ ஸ்டார்ஸ் உதைப்பந்தாட்ட கழக உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர் தெரிவும் இடம் பெற்றது.

தலைவர்  : எம்.எஸ்.எம். ரபீக் உதவி தலைவர்கள் : ஜே. லிப்டி, எம்.எஸ்.எம். ஹஸன், எம்.ஐ. ஹலீம்தீன்  செயலாளர் : எஸ்.ஆர்.எம். ஆஸாத்  உதவி செயலாளர் ஜே.எம். முஸ்தாக்  தனாதிகாரி ; எஸ்.எம். ஜிப்ரி  உதவி தனாதிகாரி வை.எம். நிஸ்தாத் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம் ஷபீக், எஸ்.ஐ.எம். அஹ்சன், எச்.எம். முளப்பர்.

No comments:

Post a Comment