Wednesday, April 15, 2015

புத்தளத்தில் புதிய உதைப்பந்தாட்ட லீக்

தற்போது இயங்கி வரும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கிலுள்ள உதைப்பந்தாட்ட கழகங்கள் ஒன்றினைந்து புதிய நிர்வாக சபையொன்றை தெரிவு செய்வதற்கான கூட்டமொன்றை  புத்தளம் ஐ.எப்.எம். இல் நேற்று இரவு  நடாத்தினர்.  த்ரீ ஸ்டார்ஸ், விம்பிள்டன், நியூ ஸ்ட்ராஸ், நியூ ப்ரெண்ட்ஸ், பேர்ல்ஸ், ட்ரிபல் செவென் ஆகிய உதைப்பந்தாட்ட கழக  உறுப்பினர்களுடன்   இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உதவி செயலாளரும் தொழில் நுட்ப பிரிவு தலைவருமான டப்ளிவ்.ஏ.எம். ரோஹித பெர்னாண்டோவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.